குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் 36 வது ஆண்டு நிறைவு

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தனது 36 வது ஆண்டு நிறைவு விழாவை 06 ஜனவரி 2025 அன்று குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை வளாகத்தில், குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் கொண்டாடியது.

2025 ஜனவரி 05 ம் திகதி இரவும் முழுதுமான பிரித் பாராயண நிகழ்வுடன் ஆரம்பமாகி, 36 பிக்குகளுக்கு தானம் வழங்கல் மற்றும் பண்டாரவளை, அம்பேகொட ஸ்ரீ சம்போதி சிறுவர் இல்லத்தின் பிள்ளைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஆண்டுவிழா நாளில், தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை ஸ்தாபக தந்தை மறைந்த லெப்டினன் கேணல் டி.பி.ராஜசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், மரக்கன்று நாட்டிய அவர் படையினருக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்ட அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.