கெமுனு ஹேவா படையணி படையினரால் சிரமதான பணி

கெமுனு ஹேவா படையணி படையினர் கஹெங்கம பிரதேசத்தினருடன் இணைந்து, 2025 ஜனவரி 04, அன்று கஹெங்கம பகுதியில் 2000 மீட்டருக்கும் அதிகமான சாலையை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

அதே நாளில் ஏதன்டாவல சந்தியில் வடிகால் அமைப்பு தூய்மையாக்கப்பட்டு, படையணி தலைமையகம் வரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதுடன், கஹெங்கம ஸ்ரீ வித்யாலோக பிரிவெனவிலும் துப்புரவு பணி நடத்தப்பட்டது. இத் திட்டம் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.