இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய தளபதி கடமையேற்பு

பிரிகேடியர் சி.பீ விக்ரமசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025 மே 28 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து, தளபதி படையினருக்கு உரையாற்றினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.