7th June 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதியும், பாடசாலையின் புகழ்பெற்ற பழைய மாணவருமான மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்களின் சிறந்த சாதனைகள் மற்றும் தேசத்திற்குத் தொடர்ந்து ஆற்றிய சேவையைப் பாராட்டி, குளியாப்பிட்டி சாரநாத் கல்லூரி, 2025 மே 15 அன்று சிறப்புப் பாராட்டு விழாவை நடத்தியது.
சிரேஸ்ட அதிகாரி, தனது உரையில், தனக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் மேலும் பாடசாலை தனது பயணத்தில் ஏற்படுத்திய வளர்ச்சி செல்வாக்கைப் பற்றி நினைவுகூறினார். கல்வி மற்றும் வலுவான மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சிறந்து விளங்க மாணவர்களை ஊக்குவிக்கும் செய்தியுடன் விழா நிறைவடைந்தது.