9th June 2025
12 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் டப்ளியூ.எஸ்.என் ஹேமரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு 2025 ஜூன் 04 அன்று 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் 18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் வழங்கப்பட்டது. பின்னர் அவர் குழு படம் எடுத்துகொண்டதுடன் மரக்கன்றினையும் நாட்டினார்.
பின்னர், வெளிச்செல்லும் தளபதி, 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாப்பாட்டு மண்டபத்தையும் அதிகாரவனையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்கள் உணவகத்தையும் திறந்து வைத்தார். பின்னர், அவர் படையினருக்கு உரையாற்றியதுடன், மேலும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்திலும் கலந்து கொண்டார.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.