9th June 2025
தொண்டர் படையணி தலைமையகத்தின் அதிகாரிகள் உணவகம், இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களால் 2025 ஜூன் 5 அன்று மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட மத சடங்குகளுடன், திறந்து வைக்கப்பட்டது.
இந்த முயற்சி தொண்டர் படையணி தலைமையகத்தின் பிரதி தளபதியின் மேற்பார்வையின் கீழ், பொறியியல் சேவைகள் படையணியின் அர்ப்பணிப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
தொண்டர் படையணி தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.