ஹுணுபிட்டிய கங்காராமய விகாரை நவம் பெரஹெரயில் இராணுவத் தளபதி புனித தாதுகளுக்கு மலர் வழிப்பாடு

ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையில் நடைபெற்ற இறுதி நவம் பெரஹெராவை முன்னிட்டு நவம் பௌர்ணமி தினத்தன்று (பெப்ரவரி 12) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் புனித தாதுகளுக்கு மலர் வழிப்பாடு செய்தார். 45 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் வருடாந்த ஊர்வலம், ஆரம்ப மத ஆசிர்வாதம் மற்றும் பிரார்த்தனைகளுக்குப் பின்னர் ஆரம்பமாகியது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புனித தாது கலசத்தை யானையின் மீது வைபவ ரீதியாக வைத்தார்.

இறுதி ஊர்வல தொடக்க நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு நவம் பெரஹெர, கங்காராமய விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.