இராணுவத் தலைமையகத்தில் புதுப்பிக்கப்பட்ட TATA 709 டிரக் வாகனங்களை இராணுவத் தளபதி ஆய்வு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சமீபத்தில் உடவலவை கள பட்டறையில் புதுப்பிக்கப்பட்ட TATA 709 பத்து டிரக்குகளை இராணுவ பவனைக்கு வழங்கினர்.

இராணுவத் தளபதி இந்த வாகனங்களை இராணுவத் தலைமையகத்தில் 2025 பெப்ரவரி 19 அன்று ஆய்வு செய்துடன் இது இராணுவத்தின் வழங்கல் திறன்களை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்த வாகனங்களின் புதுப்பித்தல் பணிகள் உடவலவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் கள பட்டறையின் படையினரால் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்தந்த பிரிவுகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு அவற்றின் செயல்பாட்டு தயார்நிலை உறுதி செய்யப்பட்டது.

உபகரண பணிப்பாளர் நாயகம், போர் கருவி பணிப்பாளர் நாயகம், மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர் நாயகம், போக்குவரத்து மற்றும் வழங்கல் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.