2025 ஆண்டுக்கான கடல் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இராணுவ விளையாட்டுக் கழகம் முன்னிலை

இலங்கை நீர் விளையாட்டு கழகத்தினால் 2025 பெப்ரவரி 22 முதல் 23 வரை கொழும்பின் துறைமுக நகர கடற்கரை பூங்காவில் வருடாந்த கடல் நீச்சல் சாம்பியன்ஷிப் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கலாநிதி ஜெப்ரி துலாபந்தன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ விளையாட்டுக் கழகம், நான்கு போட்டிகளில் மூன்று கிண்ணங்களை பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டது.

போட்டியின் போது, இலங்கை இராணுவ சேவை படையணியைச் சேர்ந்த சிப்பாய் என்.எச்.ஏ.டி. சில்வா பெண்களுக்கான 10 கி.மீ திறந்த போட்டியில் தங்கம் வென்றதுடன் அதே நேரத்தில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த சிப்பாய் ஆர்.பி.டி. நிரோஷன ஆண்களுக்கான 10 கி.மீ திறந்த போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

ஆண்களுக்கான 5 கி.மீ திறந்த போட்டியில் சிப்பாய் ஆர்.பி.டி. நிரோஷன தங்கம் வென்றதுடன் அதே நேரத்தில் பெண்களுக்கான 5 கி.மீ திறந்த போட்டியில் சிப்பாய் என்.எச்.ஏ. டி சில்வா நான்காவது இடத்தைப் பிடித்தார்.