3rd March 2025
இலங்கை விமானப்படை தனது 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 பெப்ரவரி 28 முதல் மார்ச் 02, வரை தொடர்ச்சியாக 26 வது தடவையாக ‘விமானப்படை சைக்கிள் ஓட்டம் - 2025 போட்டியை நடத்தியது. மூன்று கட்டப் பந்தயம் வீரவிலவிலிருந்து இரத்தினபுரி, கண்டி, குருநாகல் மற்றும் கட்டுநாயக்க வழியாக காலி முகத்திடல் வரை 408 கி.மீ தூரத்தைக் கொண்டிருந்தது, இப்போட்டியில் வெளிநாட்டு போட்டியாளர்கள் உட்பட 166 சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
இலங்கை இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் சந்தருவன் பிந்து ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார், சிப்பாய் மீமனகே பெரேரா மூன்றாவது இடத்தைப் பெற்று, 23 வயதுக்குட்பட்ட சாம்பியன்ஷிப்பையும் வென்றார். இராணுவ சைக்கிள் ஓட்டுதல் அணி சிறந்த வேகத்திற்கான விருதையும் மலையின் ராஜா பட்டத்தையும் வென்று தன்னை மேலும் சிறப்பித்துக் கொண்டது. இறுதியில் ஒட்டுமொத்த அணி சாம்பியன்ஷிப்பை வென்றது.
கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விமானப்படைத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
(புகைப்படம் : www.airforce.lk)