6th June 2025
இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஜூன் 05 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படைக்கு 1990 செப்டம்பர் 07 ஆம் திகதி, பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி 02 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் மற்றும் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1991 மார்ச் 13 இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை பீரங்கிப் படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 டிசம்பர் 27 திகதி அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி, 2025 ஜூன் 14 ம் திகதி நிரந்தர படையில் இருந்து தனது 55 வயதில் ஓய்வு பெறவுள்ள நிலையில், தற்போது 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்தார். அவர் 4வது களப் இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் 7வது காலாட் இலங்கை பீரங்கிப் படையணியின் குழு தளபதி, 8வது நடுத்தரப் இலங்கை பீரங்கிப் படையணியின் 27வது பேட்டரியில் பேட்டரி கெப்டன், 8வது நடுத்தர இலங்கை பீரங்கிப் படையணியின் 26வது மற்றும் 27வது பெட்டரிகளின் பேட்டரி கெப்டன், 10வது இலங்கை பீரங்கிப் படையணியின் 30வது மற்றும் 10வது பெட்டரியின் பேட்டரி தளபதி, 10வது இலங்கை பீரங்கிப் படையின் பிரதி தளபதி, 10வது இலங்கை பீரங்கிப் படையணியின் 32வது மற்றும் 103வது பெட்டரிகளின் பேட்டரி தளபதி, பீரங்கிப் பாடசாலையில் பணி நிலை அதிகாரி II, 4வது களப் இலங்கை பீரங்கிப் படையின் தலைமையக பெட்டரியில் பேட்டரி தளபதி, 4வது களப் படைப்பிரிவு இலங்கை பீரங்கிப் படையின் இரண்டாம் கட்டளைத் தளபதி, 22வது காலாட் படைப்பிரிவு மற்றும் 21வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணி நிலை அதிகாரி I (செயல்பாடுகள்) ஆகவும் பணியாற்றினார்.
அவர் 7வது காலாட் இலங்கை பீரங்கிப் படையின் கட்டளை அதிகாரி, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணி நிலை அதிகாரி I (ஒருங்கிணைப்பு), 51வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணநிலை அதிகாரி I (செயல்பாடுகள்), சுஹுருபாய பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரியாகவும், 54வது காலாட் படைப்பிரிவு மற்றும் 22வது காலாட் படைப்பிரிவின் கேணல் (பொது பணி), 593வது காலாட் பிரிகேட் தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் (பொது பணி), இராணுவத் தள வைத்தியசாலை (கண்டி) இல் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவத் தள வைத்தியசாலை (கண்டி) இல் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் 21வது காலாட் படை பிரிவின் தளபதியாகவும் பணியாற்றினார்.
இலங்கை இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி அவருக்கு ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது பதவிகாலத்தில் அதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவப் பட்ட படிப்புகளை முடித்துள்ளார். இளம் அதிகாரிகளுக்கான தயாரிப்பு பாடநெறி, படைப்பிரிவுத் தளபதிகளின் தந்திரோபாயப் பாடநெறி (கட்டம் II), படைப்பிரிவுத் தளபதிகளின் பாடநெறி (கட்டம் III), அடிப்படை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு பாடநெறி, அலகு கணக்கு அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை பாராசூட் பயிற்சி பாடநெறி, சிரேஷ்ட பணி நிலை பாடநெறி மற்றும் பீரங்கி அதிகாரிகளின் மேம்பட்ட பீரங்கித் திட்டநெறி ஆகியவை இதில் அடங்கும். இந்தியா பீரங்கி இளம் அதிகாரிகளுக்கான (கள) பாடநெறி, சீனா பீரங்கி பயிற்றுவிப்பாளர் பாடநெறி, இந்தியா மேம்பட்ட பீரங்கித் திட்டநெறி, அமெரிக்கா பீரங்கித் துறை கெப்டன்கள் தொழில் பாடநெறி,கின்யா சமூக அடிப்படை அனர்த முகாமைத்துவ பயிற்சி பாடநெறி மற்றும் சீனா வான் பாதுகாப்புப் படைகளின் படையலகு தளபதிகள் பாடநெறி ஆகியவற்றையும் அவர் பயின்றுள்ளார்.