7th June 2025
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் 2025 ஜூன் 06 அன்று இந்திய-இலங்கை நட்புறவு வாசிப்புப் பிரிவின் ஆரம்பத்துடன் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறித்தது, இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்திய பாதுகாப்புச் செயலாளர் திரு. ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வருகையுடன் அன்றைய நிகழ்வுகள் தொடங்கின. அவருக்கு சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது, பின்னர் போர்வீரர்கள் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இராணுவத் தளபதிக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வின் அடையாளமாக இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி வளாகத்தில் ஒரு மரக்கன்று நாட்டப்பட்டது. அதன் பின்னர், புதிதாக கட்டப்பட்ட குதிரை சிலைக்கு அதிகாரப்பூர்வ திறப்பு விழா இடம்பெற்றது. இராணுவத் தளபதி இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியுடன் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டார். அதன் பின்னர் உத்தியோகபூர்வ அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் கருத்துகளை பதிவிட்டார். மேலும் ஒரு சுருக்கமான நினைவு விழாவில் பங்கேற்றார்.
நிகழ்வின் இரண்டாவது அமர்வில், அனைத்து பங்கேற்பாளர்களுடனும் ஒரு குழுபடம் எடுத்துக்கொண்டதுடன், இந்திய-இலங்கை நட்புறவு வாசிப்புப் பிரிவின் முறையான திறப்பு விழா இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து புதிதாக நிறுவப்பட்ட வசதியின் வழிகாட்டல் சுற்றுப்பயணம் நடைபெற்றது, இது பயிலிளவல் அதிகாரி கல்வித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமையப்பட்டதாகும்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், பிரமுகர்கள் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டதுடன் பயிலிளவல் அதிகாரிகள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.மேலும் மரக்கன்று நடுதல் மற்றும் கல்வியற்கல்லூரி வளாகத்தின் சுற்றுப்பயணத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.