பிரதி பதவி நிலை பிரதானியின் தலைமையில் “ஆரோக்கியமான தேசம் ஆரோக்கியமான இராணுவம்” என்ற கலந்துரையாடல்

“ஆரோக்கியமான தேசம் ஆரோக்கியமான இராணுவம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் 02, அன்று கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது, இதன்போது தொற்றா நோய்களைத் தடுப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறிவது தொடர்பாக கவனம் செலுதப்பட்டது.

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த அமர்விற்கு தலைமை தாங்கினார்.

இராணுவத்தினரிடையே, குறிப்பாக இளம் வயதிலேயே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதை இந்த கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது. இது செயல்பாட்டு செயல்திறனை மோசமாக பாதிக்கின்றதுடன், ஆரம்பகால தலையீடு மற்றும் மூலோபாய தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் முக்கியத்துவம் வழங்கப்பட்டதுடன் நீண்டகால சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அமர்வில் கலந்து கொண்டனர்.