அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் குழு இராணுவத் தளபதியை சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் குழு 2025 மார்ச் 5 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தது.

இந்தக் குழுவில் சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர் ஆஷ் ஷேக் பாசில் பாரூக், சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர் ஆஷ் ஷேக் பரூத் பாரூக், சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர் ஆஷ் ஷேக் எஸ்எல் நவ்பர் மற்றும் மக்கள் தொடர்பு நிர்வாக உறுப்பினர் ஆஷ் ஷேக் பீஎல் சல்மான் ஆகியோர் அடங்குவர்.