16th March 2025
இராணுவத்தின் செயற்பாடு மற்றும் நிர்வாகத் தயார்நிலையை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மார்ச் 11 அன்று களப் பொறியியல் பிரிகேட் மற்றும் 8 வது களப் பொறியியல் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, படையினருக்கு உரையாற்றுவதற்கு முன்பு, சம்பிரதாயங்களுக்கமைய வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது. அவர் தனது உரையில், ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும், "தூய இலங்கை" திட்டம் போன்ற தேசிய முயற்சிகளுக்கு இராணுவத்தின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் வீரர்களின் நல்வாழ்வின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதிகாரிகளுக்கு உரையாற்றிய அவர், அவர்களின் கடமைகளில் கவனம் செலுத்தி சமூக மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களை ஊக்குவித்தார். தேசிய வளர்ச்சியில் இராணுவத்தின் குறிப்பிடத்தக்க பங்கையும் "தூய இலங்கை" திட்டத்தின் முயற்சியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். விஜயத்தின் முடிவில், அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.