தர்மராஜா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் இராணுவ பதவி நிலை பிரதானி பங்குபற்றல்

கண்டி தர்மராஜா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2025 மார்ச் 12 ஆம் திகதி லேக் வியூ பார்க் மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபரின் அழைப்பை ஏற்று இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

அன்றைய நிகழ்வுகளில் பல்வேறு தடகளப் போட்டிகள் இடம்பெற்றன. அதில் மாணவர்கள் தங்கள் திறமைகளையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர். நிகழ்வுகளின் பின்னர் இராணுவ பதவி நிலை பிரதானி மாணவர்களுக்கு உரையாற்றிய போது, கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிலும் சிறந்து விளங்க பாடுபட மாணவர்களை ஊக்குவித்தார். தனது உரையின் முடிவில், தர்மராஜா கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாடசாலையின் மிக உயர்ந்த இராணுவ அதிகாரியாக, பிரதம விருந்தினராக தன்னை அழைத்தமைக்காக அதிபர், தலைவர் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

விருது வழங்கும் விழாவின் போது, சிறந்த வீரர்களுக்கும், வெற்றி பெற்ற வீரர்களுக்கும் அவர்களின் விளையாட்டுத் திறனை அங்கீகரித்து பரிசுகளை வழங்கினார். நிகழ்வின் முடிவில், சிரேஷ்ட அதிகாரியின் வருகையைப் பாராட்டி அவருக்கு ஒரு பரிசுப் பொதி வழங்கப்பட்டது.