இராணுவத் தளபதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பகுதியில் நிருவாக ஆராய்வு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 21 ஆம் திகதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நிருவாக ஆராய்வு ஒன்றை மேற்கொண்டார். இப்பயணம், அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாட்டுகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளை பார்வையிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஆராய்வுச் சுற்றுப்பயணத்தின் போது, இராணுவத் தளபதி பனாகொடை இராணுவத் தள மருத்துவமனை, விளையாட்டு பிரதேசம் மற்றும் கெந்தலந்த அதிகாரிகள் திருமண விடுதி வளாகம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

மேலும், இராணுவத் தளபதி நாரஹேன்பிட்ட அதிகாரிகள் விடுதி வளாகத்கின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதுடன், அங்கு அவர் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தார்.

பொது பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.