ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

35 வருட கால சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டி.பீ வெலகெதர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 2025 மார்ச் 26 ம் திகதியன்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் தம்மிக்க பிரியந்த வெலகெதர அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1990 செப்டம்பர் 07 ஆம் திகதி, பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி இல 01 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1992 டிசம்பர் 27 இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை பீரங்கிப் படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2023 ஓகஸ்ட் 19, அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார். சிரேஷ்ட அதிகாரி, 2025 மார்ச் 29 ம் திகதி நிரந்தர படையில் இருந்து தனது 55 வயதில் ஓய்வு பெறுகின்றார்.

தனது பணிக்காலம் முழுவதும் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர், 17வது பெட்டரி – 6 வது கள இலங்கை பீரங்கிப் படையணியின் குழு தளபதி, இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் குழு தளபதி, 23வது பெட்டரி - 6வது கள இலங்கை பீரங்கிப் படையணியின் குழு தளபதி, 29வது பெட்டரி - 9வது கள இலங்கை பீரங்கிப் படையணியின் பெட்டரித் தளபதி, பெட்டரி இருப்பிடத் தளபதி, 14வது ரொக்கெட் இலங்கை பீரங்கிப் படையணியின் அதிகாரிகள் பயிற்சி அதிகாரி, 14வது ராக்கெட் படையணியின் 143 வது ரொக்கெட் பெட்டரி தளபதி, 11வது காலாட் படைப்பிரிவின் பொது பணிநிலை அதிகாரி 2 (பயிற்சி), இராணுவத் தலைமையகத் திட்ட பணிப்பகத்தின் பொதுப் பணி நிலை அதிகாரி 2 (திட்டங்கள்), 17 வது (புலனாய்வு) இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள் கற்றல் நிலையத்தின் பயிற்றுவிப்பாளர், 8வது மத்திய இலங்கை பீரங்கிப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, தலைமையகம் ஹைட்டி ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியின் பொதுப் பணி நிலை அதிகாரி 1 (யூ2), இராணுவத் தலைமையக செயல்பாட்டு பணிப்பகத்தின் ஐ.நா. பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (மேலதிக), இராணுவத் தலைமையக செயல்பாட்டு பணிப்பகத்தின் பொதுப் பணி நிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 6வது களப் இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவப் பயிற்சி கட்டளையின் மூலோபாய மற்றும் கோட்பாட்டு பிரிவின் பணி நிலை அதிகாரி 1 (மூலோபாய மற்றும் கோட்பாடு), இராணுவப் பயிற்சி கட்டளை மூலோபாய மற்றும் கோட்பாட்டு பிரிவின் கேணல், நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தின் அமைதி காக்கும் விவகார அதிகாரி, 571 காலாட் பிரிகேட் தளபதி, பீரங்கிப் படையணியின் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் பதில் இராணுவ தொடர்பு அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி ஆகிய பதவிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

எதிரியை எதிர்கொள்வதில் அவர் காட்டிய துணிச்சலைப் பாராட்டி, சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது சேவைக்காக ரண சூர பதக்கம் (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா பதக்கம்ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை முடித்துள்ளார், அவற்றில் அலகு நிர்வாக பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, பரசூட் அடிப்படை பாடநெறி - பாகிஸ்தான், பீரங்கி இளம் அதிகாரிகளின் (கள) பாடநெறி - இந்தியா, பல்குழல் ரொக்கெட் லோஞ்சர் பாடநெறி - பாகிஸ்தான், உயர் துப்பாக்கி பயிற்சி - இந்தியா, தொலை தூர தாக்குதல் துப்பாக்கி பணி நிலை பாடநெறி - இந்தியா மற்றும் பீரங்கி படையலகின் தளபதிகள் பாடநெறி - சீனா ஆகியவை அடங்கும்.

சிரேஷ்ட அதிகாரி பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் பயன்பாட்டு பாடநெறி, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களில் டிப்ளோமா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அனர்த்த பகுப்பாய்வு, முகாமை மற்றும் தணிப்பு ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் போன்ற உயர் கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளைப் பெற்றுள்ளார்.