சிரேஷ்ட கட்டளை பாடநெறி மாணவ அதிகாரிகள் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

சிரேஷ்ட கட்டளை பாடநெறி மாணவ அதிகாரிகள் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் இலங்கை இராணுவத்தில் கட்டளை அதிகாரிகளாகப் பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கான சிரேஷ்ட கட்டளை பாடநெறி எண். 13 இன் மாணவ அதிகாரிகள், தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 மார்ச் 26 அன்று, இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.

குழு படத்தைத் தொடர்ந்து, இராணுவப் போர் கல்லூரி தூதுக்குழுவினர் "சமகால படையலகு கட்டளை அதிகாரிகளின் பங்கு" என்ற தலைப்பில் பயிற்சி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் டப்ளியூ.எம்.என்.கே.டி பண்டார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் நிகழ்த்தப்பட்ட விரிவுரையில் கலந்து கொண்டனர்.

தகவல் தரும் விரிவுரையினை தொடர்ந்து கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. இதன் மூலம் மாணவ அதிகாரிகள் முதன்மை பணிநிலை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அன்றைய நிகழ்வுகளின் நிறைவில் இராணுவப் போர் கல்லூரி தூதுக்குழு நடவடிக்கை பணிப்பகம் மற்றும் இராணுவ புலனாய்வு பணிப்பகம் என்பவற்றையும் பார்வையிட்டனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.