இராணுவத் தளபதி சிறப்பு இப்தார் நிகழ்வில் பங்குபற்றல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மார்ச் 26 கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற சிறப்பு இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த விழா, புனித ரமலான் மாதத்தில் பாரம்பரியமாக இப்தார் நோன்பு நோன்பதனை குறிக்கும் வகையில், இலங்கை இராணுவத்திற்குள் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தியது.

இந்த நிகழ்வு இலங்கை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் மேஜர் ஜெனரல் டிஎன் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் வெளிநாட்டு முஸ்லிம் மாணவர் அதிகாரிகள் மற்றும் அனைத்து படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி படையினரும் கலந்துகொண்டனர்.