10th May 2025
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் லயா விடுதி முகாமைத்துவ சபை தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சனிக்கிழமை (மே 10, 2025) கல்குடா லயா விடுதியை ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், நாடு முழுவதும் லயா விடுதிகளின் பெயரை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்த வேண்டிய முக்கிய பகுதிகளை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அடையாளம் காட்டினார்.
இலங்கையில் உள்ள ஏனைய சங்கிலித் தொடரிலுள்ள விடுதிகளின் தரத்திற்கு ஏற்ப விடுதிகளின் தரத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அவர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். அதே நேரத்தில் சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் மன உறுதியை அதிகரிக்க மேம்பட்ட நலன்புரி வசதிகளையும் வழங்க அறிவுறுத்தினார். லயா தொடரின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
ஆய்வின் போது பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியுடன் லயா தொடரின் பொது தலைவர் லெப்டினன் கேணல் பீஎம்ஐஎம் பத்திராஜா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.