பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மின்னேரியா இராணுவத் தள மருத்துவமனைக்கு நிருவாக விஜயம்

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வெள்ளிக்கிழமை (09) மின்னேரியா இராணுவத் தள மருத்துவமனைக்கு நிருவாக விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, முன்னாள் காலாட் படை பயிற்சி நிலையத்தின் தலைமையகக் கட்டிடம், தற்போதைய வெளிநோயாளர் பிரிவு, வார்டுகள் மற்றும் புல்ஹீம்ஸ் பிரிவு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

விஜயத்தின் போது மருத்துவ வசதி, பல் மருத்துவப் பிரிவு, அனுமதித்தல் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவை முன்னாள் காலாட் பயிற்சி நிலையத்தின் தலைமையக கட்டிடத்திற்கு மாற்றுவது குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.

மருத்துவமனை வசதிகளை இடமாற்றம் செய்வது காலாட் பயிற்சி நிலையத்தின் நடைபெற்று வரும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காது என்பதை உறுதிசெய்யும் வகையில், காலாட் பயிற்சி நிலையத்தின் மோட்டார் சூட்டாளர்களுக்கான புதிய தளத்தின் மதிப்பீட்டையும் இந்த விஜயம் உள்ளடக்கியிருந்தது.

காலாட் பயிற்சி நிலையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் 5 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையின் கட்டளை அதிகாரி, அவர்களது பணியாளர்களுடன் இந்த விஜயத்தின் போது பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியுடன் இணைந்து கொண்டனர்.