11th May 2025
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்ஜீடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் இராணுவ உள் விவகாரப் பிரிவின் முதல் ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் 2025 மே 6 ஆம் திகதி பதவி நிலை பிரதானியின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் விடயங்களை இராணுவ பதவி நிலை பிரதானி விளக்கினார். மேலும் 'தூய இலங்கை' திட்டத்தை செயற்படுத்த ஒவ்வொரு இராணுவ நிறுவனத்திலும் ஒரு உள் விவகாரப் பிரிவை நிறுவுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இராணுவ நிறைவேற்று பணிப்பாளரும் இராணுவ உள் விவகார பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இராணுவ உள் விவகாரப் பிரிவின் உறுப்பினர்களுக்கு மேலதிக விடயங்களை விரிவாகக் கூறினார். பங்கேற்பாளர்கள் செயற்பாடு, செயல்படுத்தல், மதிப்பீடு, அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல், அறிக்கையிடல் மற்றும் மேற்பார்வை மற்றும் பணியாளர்களின் பயிற்சி குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.