21st May 2025
இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 20 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த அவரை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இராணுவ பல் சேவைகள் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள்வரவேற்றனர்.
விஜயத்தின் போது, அவர் படையினரின் தங்குமிடம், உணவு விடுதி மற்றும் சிற்றுண்டிச்சாலையை பார்வையிட்டார். சுகாதார நிலைமைகள் மற்றும் மொத்த சுற்றுச்சூழல் தொடர்பாகவும் கவனம் செலுத்திய அவர் வாழ்க்கை மற்றும் செயல்பாட்டுத் தரத்தை மேம்படுத்த உடனடி மேம்பாடுகளைத் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நோயாளர்கள் ஆவணப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் உள்ளிட்ட மருத்துவமனையின் முக்கிய பகுதிகளை அவர் மேலும் ஆய்வு செய்தார். ஒவ்வொரு கட்டத்திலும், பிரதி பதவி நிலை பிரதானி ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியதுடன் தேவையான திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த அந்தந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இவ்விஜயம் தேநீர் விருந்துடன் நிறைவுற்றது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.