புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு அதிகாரச் சின்னங்கள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மே 20 ம் திகதியன்று நடைபெற்ற விழாவில் இலங்கை இராணுவத்தின் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு முறையாகப் நிலை உயர்வு வழங்கினார். இந் நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் எஎம்எ அபேயவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, மேஜர் ஜெனரல் எஎம்சீ அபேயகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ, மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, மேஜர் ஜெனரல் ஜீபீபீ குலதிலக என்டிசீ, மேஜர் ஜெனரல் டிசீ மகாதந்தில பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்வீ பெர்னாண்டோ யுஎஸ்பீ என்டிசீ ஐஜீ, மேஜர் ஜெனரல் எஸ்எ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் ஆர்டி சல்லே என்டிசீ, மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எபி விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ மற்றும் மேஜர் ஜெனரல் ஜீஎடி கொடேவத்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ ஆகியோர் அடங்குவர்.

புதிதாக நிலை உயர்வு பெற்ற அதிகாரிகளின் குடும்பத்தினருடன் சேர்ந்து, இராணுவத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி அவர்களால் அதிகார சின்னங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து சிரேஸ்ட அதிகாரிகள் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவித்ததுடன் குழுப் படம் எடுத்துக்கொண்டனர்.