இராணுவ விளையாட்டில் சிறந்து விளங்கிய அதிகாரிக்கு சர்வதேச விளையாட்டு பேரவையின் நைட்ஹுட் விருது

சர்வதேச விளையாட்டு பேரவையின் பொதுச் சபை மற்றும் 80 வது மாநாட்டு 2025 மே 17 முதல் 25 வரை கொழும்பு கிராண்ட் மைட்லேண்ட் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக இராணுவ விளையாட்டு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு பங்களித்த ஒன்பது புகழ்பெற்ற இராணுவ வீரர்களுக்கு கௌரவ பதக்கங்கள் மற்றும் "நைட்" என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.

கௌரவிக்கப்பட்டவர்களில், இலங்கை இராணுவத்தின் மேஜர் நளிந்த ரத்நாயக்க, சர்வதேச சாதனைகள் மற்றும் டேக்வாண்டோ வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்ட நைட் பட்டத்தைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்தார். அவரது பரிந்துரையை பிரசெல்சில் உள்ள சர்வதேச விளையாட்டு பேரவையின் தலைமையகம் பரிந்துரைத்தது.

மேஜர் நளிந்த ரத்நாயக்க, 2021 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த உலக டேக்வாண்டோ முதுநிலைப் பயிற்சித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், 6 வது டான் பிளாக் பெல்ட்டை அடைந்த முதல் இராணுவ டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளர் ஆவார். 2022 முதல், சர்வதேச விளையாட்டு பேரவையின் உலக இராணுவ டேக்வாண்டோ குழுவின் தலைவராக பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.