31st May 2025
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், காயமடைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் நலன் மற்றும் நிருவாக விடயங்களை ஆராய்வதற்காக ஒருங்கிணைப்பு நிலையங்கள் 2025 மே 26 முதல் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு இராணுவ நிறுவனத்திலும் நிறுவப்பட்டன.
போக்கு வரத்து தூரம் காரணமாக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், காயமடைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அந்தந்த படையணி தலைமையகங்கள் அல்லது படையலகுகளை அணுகுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவப்பட்ட இந்த புதிய ஒருங்கிணைப்பு நிலையங்கள் உதவி நிலையங்களாக செயல்படுகின்றன, போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஊதிய முரண்பாடுகள், சுகாதார விடயங்கள் மற்றும் ஏனைய நலன்புரி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான குறைகள் மற்றும் பிரச்சினைகளை புகாரளிக்க ஒரு தளத்தை வழங்குகின்றன.
தற்போது, இராணுவ வீரர்கள் இந்த நிலையங்களுக்கு தொடர்ந்து சென்று தங்கள் பிரச்சினைகளை சமர்ப்பித்து வருகின்றனர். அவை தேவையான நடவடிக்கைகளுக்காக அந்தந்த அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.