30th May 2025
இலங்கை பொறியியல் படையணி, அதன் வர்ண இரவு - 2025 விழாவை 2025 மே 28 ஆம் திகதி அன்று கொழும்பு கிராண்ட் மைட்லேண்டில் நடாத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு விளையாட்டுத் துறைகளில் இலங்கை பொறியியல் படையணியின் விளையாட்டு வீரர்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து பாராட்டுவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.
22 விளையாட்டு நிகழ்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 142 இலங்கை பொறியியல் படையணியின் விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் வர்ணங்கள் வழங்கப்பட்டன. 2024 முதல் 2025 வரை சர்வதேச, தேசிய, பாதுகாப்பு சேவைகள் மற்றும் படையணிகளுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் தடகள நிகழ்வுகளில் சிறந்து விளங்கிய இந்த நபர்கள், இலங்கை பொறியியல் படையணி, இலங்கை இராணுவம் மற்றும் தேசத்திற்கு பெருமை மற்றும் போற்றுதலைக் கொண்டு வந்தமைக்காக கௌரவிக்கப்பட்டனர்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து இராணுவத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றனர்.
படையணியின் பெருமைமிக்க வரலாறு, விரிவாக்கம் மற்றும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் காணொளி ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து விருது பெற்ற விளையாட்டு வீரர்களின் சுருக்கமான அறிமுகம் இடம்பெற்றது.
அதன் பின்னர், இராணுவத் தளபதி, இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் சிறப்புமிக்க விளையாட்டு வீரர்களுக்கு வர்ணங்களை வழங்கினர்.
பின்னர், படையணியின் படைத் தளபதி, இராணுவத் தளபதிக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கினார், இது நன்றியுனர்வுடன் பரிமாறப்பட்டது. மேலும், படையணியின் விளையாட்டு வளர்ச்சியை மேலும் ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இராணுவத் தளபதி நிதி ஊக்கத்தொகையை வழங்கினார்.
இந்நிகழ்வின் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, இலங்கை பொறியியல் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எப். ஜோசப் யூஎஸ்பீ அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது. தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.