30th May 2025
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் 2025 மே 29 ம் திகதி அன்று நடைபெற்ற மாணவர் தலைவர் தின நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அதிபரின் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி, பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பணிப்பாளர், அதிபர், அங்கத்தவர்கள் மற்றும் மாணவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
நிகழ்வின் போது இராணுவத் தளபதி தொடர்பான சிறப்பு வீடியோ விளக்கக்காட்சி திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி ஊக்கமளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார். தனது உரையில், மாணவர்கள் தங்கள் அபிலாஷைகளை உறுதியுடன் தொடர, தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் ஒரு நல்ல தலைவரின் குணங்கள் தொடர்பில் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
பின்னர் பாடசாலை மாணவ தலைவர் சபையினால் நடாத்தப்பட்ட தலைமைத்துவ பட்டறையை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இராணுவத் தளபதிக்கும் அதிபருக்கும் இடையே முறையான நினைவுப் பரிசில்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.