ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 மே 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1991 ஜனவரி 02 ஆம் திகதி, பாடநெறி 35 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1992 ஓகஸ்ட் 29 அன்று இரண்டாம் லெப்டினன் நிலையில் விஜயபாகு காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 ஜூன் 05 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்படுவார்.

சிரேஷ்ட அதிகாரி, 2025 ஜூன் 07 ஆம் திகதி நிரந்தர படையில் இருந்து தனது 55 வயதில் ஓய்வு பெறவுள்ள நிலையில், தற்போது அவர் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில், 1வது விஜயபாகு காலாட் படையணியின் குழு தளபதியாகவும், அதிகாரி கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். இராணுவத் தலைமையக உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பொதுபணி நிலை அதிகாரி 3 (செயல்பாடுகள்), 1வது விஜயபாகு காலாட் படையணியின் செயல்பாடு மற்றும் பயிற்சி அதிகாரியாகவும் பணியாற்றினார். 533 வது காலாட் பிரிகேட் மேஜராகவும், இராணுவத் தலைமையக இராணுவச் செயலாளர் கிளையின் பணி நிலை அதிகாரி 2 ஆகவும், 7வது விஜயபாகு காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 8வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியாக, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பயிற்றுனர் பணிநிலை உறுப்பினராகவும், இராணுவத் தலைமையக தளபதி செயலகத்தின் பதில் கேணல் பொதுபணி மற்றும் பணி நிலை அதிகாரி 1 ஆகவும் பணியாற்றினார். மேலும் அவர் இராணுவத் தலைமையக இராணுவச் செயலாளர் கிளையின் பணி நிலை அதிகாரி 1 (நெறிமுறைப் பிரிவு) மற்றும் பணி நிலை அதிகாரி 1 (தரம் 2/3 பிரிவு) போன்ற பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

ஹைட்டி ஐநா அமைதி காக்கும் பணியின் பணிநிலை அதிகாரியாக பணியாற்றுவதும் அவரது வெளிநாட்டு கடமைகளில் அடங்கும். அவர் அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளராக (படையலகு கட்டளை பாடநெறி பிரிவு) மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளராகவும், 581 வது காலாட் பிரிகேட் தளபதியாகவும், விஜயபாகு காலாட் படையணியின் நிலைய தளபதியாகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதி தளபதியாகவும், திட்ட பணிப்பகத்தின் பணிப்பாளராகவும், இராணுவத் தலைமையக செயல்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் வகித்துள்ளார். தற்போது அவர் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.

சிரேஷ்ட அதிகாரிக்கு ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சுர பதக்கம் (இரண்டு முறை விருது) இலங்கை இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது பணிக்காலம் முழுவதும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவப் பட்ட படிப்புகளை நிறைவு செய்துள்ளார். இவற்றில் தாக்குதல் முன்னோடி பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, படையலகு கணக்கு அதிகாரிகள் பாடநெறி மற்றும் இராணுவ கட்டளை மற்றும் பணி நிலை பாடநெறி ஆகியவை அடங்கும். மேலும் அவர் இளம் அதிகாரிகள் பாடநெறி, கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனபோர் பாடநெறி, சிரேஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் இந்தியா பாதுகாப்பு சேவைகள் பணி நிலை பாடநெறி போன்ற பல சர்வதேச இராணுவப் பயிற்சித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார். ஐக்கிய நாடுகளின் படைத் தளபதிகள் பாடநெறி மற்றும் பங்களாதேஷில் பாதுகாப்புத் துறை சீர்திருத்த பாடநெறி மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வெளிநாட்டு பயிற்று பணி நிலை பாடநெறியையும் அவர் பயின்றுள்ளார்.

இந்த சிரேஷ்ட அதிகாரி களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பட்ட படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.