இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி அதிகாரிகளுக்கு உரை

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 21 அன்று அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் தொடங்கப்பட்ட "தூய இலங்கை" திட்டத்தின் முயற்சியுடன் இராணுவ முயற்சிகளை இணைப்பதில் கவனம் செலுத்தி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.

ஒழுக்கத்தின் முக்கியத்துவம், நெறிமுறையற்ற நடைமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் மற்றும் இராணுவ சம்பிரதாயம் மற்றும் நற்பெயரை உறுதி செய்வதற்கு உண்மையான அதிகாரி – சிப்பாய்களின் ஈடுபாட்டின் முக்கியதுவத்தை வலியுறுத்திய அவர் இந்தக் கொள்கைகளை இணைத்து, அதிகாரிகள் முன்மாதிரியாக வழிநடத்தவும், தொழில்முறை மற்றும் பரஸ்பர மரியாதை கலாசாரத்தை வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒழுக்கமான மற்றும் நிலையான எதிர்காலத்தை வடிவமைப்பதில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டும் வகையில், ஒற்றுமை மற்றும் முற்போக்கான உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.