படையணியின் படைத் தளபதி 1 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணிக்கு விஜயம்

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2 ஜனவரி 2025 அன்று 1 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த அவரை 1வது இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மரியாதையுடன் வரவேற்றார் பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றினார். அவர் தனது உரையின் போது, தொழில்முறை, தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் இராணுவத்தின் கௌரவத்திற்கான மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

விஜயத்தின் நிறைவில், அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டார். இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.