4th January 2025
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைப்புடன், 04 ஜனவரி 2025 அன்று மருதங்கேனி கலாசார மையத்தில் பாடசாலை உதவி பொருட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் போது, கெவில்-கட்டைக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 46 மாணவர்கள் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர். இத்திட்டத்திற்கு திருமதி.நுகவெல மற்றும் அவரது குடும்பத்தினர் அனுசரணை வழங்கினர். யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர் பங்குபற்றினர்.