இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி அவர்கள் 2025 ஜனவரி 16 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

உதவி பாதுகாப்பு ஆலோசகர் வருகை தந்த போது, இராணுவத் தளபதி அவரை அன்புடன் வரவேற்றார். இந்த நல்லுறவு சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் மேம்படுத்த இராணுவ இராஜதந்திரத்தை முன்னேற்றுவது குறித்து இரு பிரமுகர்களும் கலந்துரையாடினர்.

சந்திப்பின் நிறைவில், வழக்கமான சம்பிரதாயங்களுக்கு இணங்க, இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவுப் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.