தியத்தலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 50 நிறைவு

துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.50 தியத்தலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் 13 நவம்பர் 2024 முதல் 30 டிசம்பர் 2024 வரை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. 06 அதிகாரிகள் மற்றும் 28 சிப்பாய்கள் பாடநெறியை பின்பற்றினர்.

நிறைவு நிகழ்வில் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.ஜே.ஜி.ஏ.எம் சுபசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அவர் தனது நிறைவுரையில், பாடநெறி முழுவதிலும் பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனுக்காக அவர்களை பாராட்டினார்.

பாடநெறியின் சிறந்த சாதனையாளர்கள் பின்வருமாறு:

• 1 ஆம் இடம்: கஜபா படையணியின் லெப்டினன் ஜிஎச்ஏஎல்டி ஹெட்டியாராச்சி

• 2 ஆம் இடம்: இலங்கை சிங்கப் படையணியின் லெப்டினன் கே.ஏ.டி. நயனஜித்

• 3 ஆம் இடம்: இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் இரண்டாம் லெப்டினன் ஏ.பீ.எஸ். தனஞ்சய