56 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் நத்தார் கரோல்

56 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் வன்னி – 2024, வவுனியா கலாசார மண்டபத்தில் 29 டிசம்பர் 2024 அன்று 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வண. பீ கிறிஸ்துநாயகம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கரோல் பாடல்கள் மற்றும் அமைதிக்கான பிரார்த்தனைகளுடன் கொண்டாடப்பட்டது. வவுனியா புனித அந்தோனியார், புனித ஜோசப், அன்னை மாதா தேவாலயங்கள் மற்றும் மடு மாதா ஆகிய தேவாலயங்களின் பாடகர்களுடன் இராணுவ பாடகர் குழு இணைந்து இந்நிகழ்வை மெருகேற்றியது வானவேடிக்கை மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சிற்றுண்டி வழங்கலுடன் கொண்டாட்டம் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.