இராணுவப் போர்க் கல்லூரியின் 3 வது ஆண்டு நிறைவு விழா

புத்தல இராணுவ போர்க் கல்லூரி அதன் 3 வது ஆண்டு நிறைவு விழாவை 17 டிசம்பர் 2024 அன்று கொண்டாடியது.

2024 டிசம்பர் 13 அன்று ஹதபானாகலயிலுள்ள 'மெத்சேவா' பாடசாலையிலுள்ளவர்களுக்கு வழங்கிய மதிய உணவுடன் நிகழ்வுகள் ஆரம்கமாகின. 2024 டிசம்பர் 15 அன்று, முகாம் விகாரையில் மத நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து குபுக்கனை சௌபாக்யா விசேட தேவையுடையோர் பாடசாலையில் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆண்டு நிறைவி விழா நாளில், தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படையினருக்கான உரை நிகழ்த்தப்பட்டதுடன், குழுப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைத்து நிலையினருக்கிமான மதிய உணவு விருந்து மற்றும் இசை நிகழ்ச்சியுடன் அன்றய நாள் நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.