இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் வெளிசெல்லும் தளபதிக்கு பிரியா விடை

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு, கொஸ்கம இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தில் 2025 ஜனவரி 03 அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.

2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் வெளிசெல்லும் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதியால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

பின்னர், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததைக் குறிக்கும் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரி அலுவலகத்தில் தனது உருவப்படத்தை திறந்து வைத்து படையினருடன் குழு படம் எடுத்து கொணதுடன், படையினருக்கு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.