3rd January 2025
இராணுவத் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி கடமைகளை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களிடம் இராணுவத் தலைமையகத்தில் 2 ஜனவரி 2025 அன்று நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கையளித்தார்.
கடமைகளை ஒப்படைப்பதை அடையாளப்படுத்தும் வகையில், இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன அவர்களிடம் கோதை ஒப்படைத்து பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இந்த தருணம் இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியாக இருந்த இராணுவத் தளபதியின் பதவிக்காலம் முடிவடைந்ததுடன் அவரது வாரிசின் தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தை குறிக்கின்றது.
அதனடிப்படையில், மேஜர் ஜெனரல் கே.வி.என்.பி. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பீரங்கி படையின் 24 வது படைத் தளபதியாக பதவியேற்கவுள்ளார். படையணி அதன் எதிர்கால முயற்சிகளுக்கு வழிகாட்டுவதில் அவரது தலைமைத்துவத்தையும் தொலைநோக்கையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.