1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 75 வது ஆண்டு வரலாற்று நூல் - மூன்றாம் தொகுதி வெளியிடு

1 வது இலேசாயுத காலாட் படையணியின் 75 வது ஆண்டு வரலாற்று நூல் - மூன்றாம் தொகுதி 2025 மே 21 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் வைபவ ரீதியாக வெளியிடப்பட்டது.

பிரதி பாதுகாப்பு அமைச்சர் - மேஜர் ஜெனரல் கேபீ அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வு யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தொடக்க உரையுடன் ஆரம்பமானது. முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் எஸ்எச்எஸ் கோட்டேகொட டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ (ஓய்வு) அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நூலின் பிரதிகள் பிரதம அதிதி மற்றும் ஏனைய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டன. அதன், இலத்திரனியல்,பதிப்பு பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் இலேசாயுத காலாட் படையணி வலைத்தளங்களில் அந்தந்த பிரமுகர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

(படம்: பாதுகாப்பு அமைச்சு)