15th August 2025
1987 – 1990 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் எல்ரீரீ பயங்கரவாத்திற்கு எதிராகப் போராடிய இந்திய அமைதி காக்கும் படையில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்துடன் இணைந்து, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. யாழ். இந்திய துணைத் தூதுவர் திரு. ஸ்ரீ சாய் முரளி எஸ் மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ ஆகியோர், இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் மலர் வைத்து அஞசலி செலுத்தினர்.
யாழ். இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் அலுவலக அதிகாரிகள், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.