யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கப் படையினரின் உதவி

2026 மே 09 திகதி அதிகாலை வேளையில் யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதற்கு 512 வது காலாட் பிரிகேட் படையினர், 17 வது கெமுனு ஹேவா படையணி படையினர் மற்றும் 14 வது கஜபா படையணி படையினர் ஆகியவற்றின் படைவீரர்கள் உதவினர்.

வைத்தியசாலை வளாகத்தில் உள்ள மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், யாழ்ப்பாண நகரப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இராணுவ படைவீரர்கள் முதலுதவிப் பணியாளர்களாக உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்த உதவினர்.

வைத்தியசாலையின் மற்ற வார்டுகளுக்கும் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கும் வகையில், ஏனைய மீட்புப் பிரிவினருடன் இணைந்து இராணுவத்தினர் மிக வேகமாகவும் ஒருங்கிணைந்தும் செயல்பட்டனர். அவர்களின் உடனடி செயற்பாட்டு வைத்தியசாலை சொத்துக்களுக்கு மேலதிக சேதம் ஏற்படுவதைக் குறைப்பதற்கும் நோயாளிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியது.

தீயை முழுமையாக அணைத்த பின்னர், படையினர் சம்பவ இடத்தில் இருந்த இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.