யாழ். பாதுகாப்புப் படையின் கீழ் இயங்கும் 10 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் 2025 பெப்ரவரி 28 அன்று மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் புனரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது

"தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய 10 வது இலங்கை பீரங்கிப் படையணியின் படையினர், 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு பூசுதல் திட்டத்தை மேற்கொண்டனர்.