யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் மெல்லிசை சிகிச்சை அமர்வு

தூய இலங்கை திட்டத்தின் கீழ், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மெல்லிசை சிகிச்சை நிகழ்ச்சித்திட்டம் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சமூக மேம்பாட்டு அபிவிருத்தி உளவியல் விரிவுரையாளர் வைத்தியர் மதுர சங்க குணவர்தன அவர்களால் நடத்தப்பட்ட இந்த அமர்வில், யாழ்பாண முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஓய்வெடுக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், சிந்திக்கவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பைப் பெற்றனர். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்சாகமூட்டும் மெல்லிசை சிகிச்சை மதிப்பு, நினைவாற்றல், உள் வலிமை மற்றும் உணர்ச்சிப் புதுப்பித்தல் ஆகியவற்றை வளர்ப்பதற்காக ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.