வன்னியில் உள்ள இராணுவ வீரர்களுக்கு தொற்றா நோய்கள் குறித்த விரிவுரை

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் தொற்றா நோய்கள் பற்றிய விரிவுரையை நடாத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு இராணுவ நோய் தடுப்பு மருந்து மற்றும் மனநல சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் மருத்துவ நிபுணர்கள் குழுவான வைத்தியர் பிரிகேடியர் ஏ.எஸ்.எம். விஜேவர்தன யூஎஸ்பீ (ஓய்வு) எம்பிபிஎஸ் எம்ஆர்சீபீ (ஐக்கிய இராச்சியம்) எப்ஆர்சீபீ (ஐக்கிய இராச்சியம்) – மருத்துவ ஆலோசகர், வைத்தியர் பிரிகேடியர் ஆர்.எம்.எம். மொனராகல யூஎஸ்பூ, மனநல மருத்துவ ஆலோசகர், வைத்தியர் மேஜர் பீ.ஏ.எஸ்.டி. ஜோதிபால சமூக மருத்துவ ஆலோசகர் மற்றும் உணவியல் நிபுணர் மேஜர் ஏ.சி.கே. உடுகம ஆகியோர் தலைமை தாங்கினர்.

விரிவுரையின் போது, நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நல்ல பழக்கவழக்கங்கள், மன அழுத்த முகாமைத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த அமர்வில் 84 அதிகாரிகள் மற்றும் 254 சிப்பாய்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில் 197 அதிகாரிகள் மற்றும் 2180 சிப்பாய்கள் 47 இடங்களில் இருந்து ஜூம் மூலம் நிகழ்நிலை முறையில் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.