வன்னியில் இலங்கை இராணுவத்தினால் பன்முக மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இராணுவத் தளபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கை இராணுவம் வன்னி பிரதேசத்தில் உள்ள கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு மனிதாபிமான முயற்சியை 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி தொடங்கியது. நீதி வழக்கறிஞர் நாயகம் பிரிகேடியர் ஆர்.டி.ஓ. பத்திரனகே மற்றும் அவரது குடும்பத்தினரால் மேற்பார்வையிடப்பட்ட இத்திட்டம், உயிலங்குளம் மற்றும் தென்னியன்குளம் கிராம மக்களுக்கு முக்கிய ஆதரவை வழங்கியது.

இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த முயற்சியின் சிறப்பம்சமாக நீர் சுத்திகரிப்பு நிலையம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இது அண்னளவாக 300 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்கும் ஒரு முக்கிய திட்டமாக கணப்பட்டதுடன், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வளமானது தண்ணீரை வாங்குவதற்கான நிதிச் சுமையிலிருந்து குடும்பங்களை விடுவிப்பது மட்டுமல்லாமல், தூய குடிநீரின் நிலையான விநியோகத்தையும் உறுதி செய்கிறது. மேலும் இது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கிறது.

மேலும், இத்திட்டத்திற்கு இணையாக புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் தாய் நல்வாழ்வுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 50 பொதிகளை விநியோகிப்பதன் மூலம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒரு கருணை காட்டும் செயல் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நன்கொடைகள் ஒரு முக்கியமான சமூகத் தேவையை நிவர்த்தி செய்ததுடன், கிராமப்புறங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டியது.

650 கிராமவாசிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு, சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தியது. 561 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.