வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் “திருப்தி மற்றும் துணிச்சலான இராணுவம்” என்ற தலைப்பில் விரிவுரை

ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 21, 54 மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவுகளின் படையினருக்காக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2025 ஜூலை 30, அன்று "திருப்தி மற்றும் துணிச்சலான இராணுவம்" என்ற தலைப்பில் விரிவுரை நடத்தப்பட்டது.

இராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் எதிர்கால சவால்களை நிவர்த்தி செய்வதும் அவர்களின் உளவியல் ரீதியான மீள்தன்மையை மேம்படுத்துவதும் இந்த விரிவுரையின் நோக்கமாகும். இந்த அமர்வை லெப்டினன் கேணல் ஈஏஎஸ்எஸ் சமிந்த மற்றும் மேஜர் எம்ஐ மரிக்கார் ஆகியோர் நடத்தினர், அவர்கள் படையினர்களுக்கிடையில் நல்வாழ்வு மற்றும் தொழில்முறை திருப்தியை வலுப்படுத்துவதற்கான மதிப்புமிக்க அறிவு மற்றும் உத்திகள் தொடர்பான விரிவுரையினை வழங்கினர்.