விஷேட காலாட் படை நடவடிக்கை பாடநெறி எண் 78 இன் விடுகை அணிவகுப்பு மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நிறைவு

விஷேட காலாட் படை நடவடிக்கை பாடநெறி எண் 78 இன் விடுகை அணிவகுப்பு 2026 ஜனவரி 19 அன்று மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந்தப் பாடநெறி 2025 ஜூலை 11 முதல் 2026 ஜனவரி 19 வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எல்.ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் சிறந்த வீரர்களுக்கு அவர்களின் சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டன. 1வது விஜயபாகு காலாட் படையணியின் கேப்டன் எம்.எச்.பீ மனதுங்க சிறந்த அதிகாரியாகவும் 5 வது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் டி.எம்.எஸ்.கே. திசாநாயக்க அவர்கள் சிறந்த சிப்பாய் விருதையும் பெற்றனர். 22 வது விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் ஆர்.எம்.டி.யூ. பிரேமசிறி சிறந்த உடற் தகுதி வீரராகவும், 9 வது விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் எச்.ஏ.டி.எஸ். சமரக்கொடி சிறந்த துப்பாக்கி சுடும் வீரராகவும் விருது பெற்றனர். சிறந்த பிரிவுக்கான விருதை 9 வது விஜயபாகு காலாட் படையணி வென்றது.