விஷேட காலாட் நடவடிக்கை 77வது பாடநெறி நிறைவு

விஷேட காலாட் நடவடிக்கை பாடநெறி எண் 77 இன் விடுகை அணிவகுப்பு 2025 ஜூன் 28 அன்று மாதுருஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.

விஷேட காலாட் நடவடிக்கை பாடநெறி எண் 77 பயிற்சி 2 மே 2025 முதல் 28 ஜூன் 2025 வரை 57 நாட்கள் 23 அதிகாரிகள் மற்றும் 164 சிப்பாய்களின் பங்கேற்புடன் காலாட் பணிப்பகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் எஸ்.ஏ.யு.ஏ. சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலை தளபதி பிரிகேடியர் கே.எல்.ஐ. கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி, 641 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏ.எல். பெரேரா, முதலாம் படை மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள் அணிவகுப்பைக் காணவும், பாடநெறியில் பங்கேற்பாளர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் கலந்து கொண்டனர்.

பயிற்சி நிறைவு அணிவகுப்பின் போது பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன:

சிறந்த மாணவ அதிகாரி – 16 வது கஜபா படையணியின் லெப்டினன் இ.எம்.பீ.எல். தயானந்த

சிறந்த மாணவ சிப்பாய் – 22 வது கஜபா படையணியின் லான்ஸ் கோப்ரல் பி.ஜீ.ஐ. பதனகே

சிறந்த உடற் தகுதி – 5 வது (தொ) சிங்க படையணியின் கோப்ரல் டி.எம்.எம்.சி ஜயசிங்க

சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் - 16 வது கஜபா படையணியின் லெப்டினன் இ.எம்.பீ.எல். தயானந்த