விசேட படையணி படையினரால் வீரமரணமடைந்த போர் வீரர்கள் கௌரவிப்பு

தேசத்திற்காக உயர்ந்த தியாகம் செய்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில், விசேட படையணி தலைமையகத்தில் 2025 ஜூலை 12, அன்று விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு விசேட படையணியின் படைத் தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

நிகழ்வு ஊர்வலத்துடன் ஆரம்பமாகியதுடன் இரவு பிரித் பாராயணம் மற்றும் மறைந்த போர் வீரர்களுக்கு ஆசிர்வாதம் வேண்டி அன்னதானம் வழங்கல் என்பனவும் இடம்பெற்றது.